/* */

பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது

பெரம்பலூரில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இருவர் கைது
X

கைது செய்யப்பட்ட செல்வம் மற்றும் மலர்க்கொடி.

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது, செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி, அவரது மகளை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக காவல்துறையிருக்கு புகார் வரப்பெற்றது.

இந்த புகாரின் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ச.மணி சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அதே ஊரை சேர்ந்த செல்வம்(33), என்ற வாலிபர் மற்றும் வீடியோ எடுக்க உடைந்தையாக இருந்த உறவினரான மலர்கொடி(45) ஆகிய இருவரை பெரம்பலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில்

பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பிற்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றது.

பெண்களை ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மன ரீதியாக துன்புறுத்துவதும் பாலியல் வன்கொடுமையே ஆகும். பெண்களுக்கு தொல்லை தரும் வகையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித பாரபட்சமின்றி காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Updated On: 17 April 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!