/* */

பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள் வேதனை

பெரம்பலூர் அருகே வெங்கனூரில் ஊரடங்கால் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிவருகிறது என்று விவசாயிகள் வேதைன தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே ஊரடங்கால் வயல்களில் வீணாகும் காய்கறிகள் : விவசாயிகள் வேதனை
X

பெரம்பலூர் மாவட்டம்  வெங்கனூரில் ஊரடங்கால் விவசாயிகளின் வயல்களிலேயே காய்கறிகள் வீணாகிறது என விவசாயிகள் கவைலயைடந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே வெங்கனூரில் உள்ள கவர்பணை பகுதியில் வசித்தி வரும் விவசாயி செல்வராஜ் தனது தோட்டத்தில் ஐந்தாயிரம் ரூபாய் செலவளித்து வெண்டை பயிர் செய்த நிலையில் தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி இருந்த ஐம்பது கிலோ வெண்டைக்காய்களை விற்க முடியாமல் தவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றார்.

மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் அவரது வயலில் தக்காளி பயிர் செய்து நன்கு விளைந்து பழுத்து கிடக்கும் பழங்களை ஊரடங்கு காரணமாக யாரும் கொள்முல் செய்ய யாரும் வராததால் பழங்கள் வயலிலேயே வீணாவதாக வேதனை தெரிவிக்கின்றார்.

மேலும் மற்ற காய்கறிகளைப் போல் தக்காளி நாள் கணக்கில் தாங்காது என தெரிவித்த அவர் தற்போது ஊரடங்கில் சந்தைகளும் மார்கெட்களும் இயங்காததால் உடனடியாக வேளாண் மற்றும் தோட்டக்கலையில் அரசே நல்ல விலைக்கு கொள்முதல் செய்து காய்களை மக்களிடம் விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டுமென வலியுறுத்தினார்.

தற்போது தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பல பகுதிகளிலும் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்து வரும் தமிழக அரசு விவசாயிகளின் காய்கறிகள் வயல்களில் வீணாகாமல் தடுத்து நல்ல விலைக்கு கொள்முதல் செய்து மக்களிடம் விற்பனைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டுமென்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Jun 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்