/* */

பெரம்பலூர் மாவட்டத்தில் 189 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் 189 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 12,727 நபர்கள் தடுப்பூசி செலுத்தினர்

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்டத்தில் 189 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
X

பைல்படம்

பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் இன்று 189 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திடும் வகையில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக வளர்ச்சித் துறையின் களப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணியாளர்கள் (அங்கன்வாடி பணியாளர்கள்), வருவாய் துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்.

சத்துணவு அமைப்பாளர்கள், பொதுசுகாதாரத் துறை பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,200 நபர்கள் பொது மக்களை ஒருங்கிணைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் பணிகளை மேற்கொண்டதன் அடிப்படையில், முதல்கட்டமாக 12.09.2021 அன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில், பெரம்பலுர் மாவட்டத்தில் 24082 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 84 நாட்கள் கடந்து விட்ட நிலையில் உள்ளவர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று, டோக்கன் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3739 நபர்களுக்கும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 2675 நபர்களுக்கும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3014 நபர்களுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 3299 நபர்களுக்கும் என பெரம்பலுர் மாவட்டத்தில் 12727 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீவெங்கட பிரியா தகவல் தெரிவித்துள்ளார்

Updated On: 19 Sep 2021 4:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?