/* */

உதகை: டெபாசிட் தொகையை இழந்த 78 பேர்

குன்னூர் நகராட்சி 79, கூடலூர் நகராட்சி 66, நெல்லியாளம் நகராட்சி38 என மொத்தம் 4 நகராட்சியில் 302 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

HIGHLIGHTS

உதகை: டெபாசிட் தொகையை இழந்த 78 பேர்
X

பைல் படம்.

மாவட்டத்தில் 4 நகராட்சிகளில் 108 வார்டுகள், 11 பேரூராட்சிகளில் 186 வார்டுகள் மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. 294 வார்டுகளில் 1,253 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுயேச்சை வேட்பாளர்கள் 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 294 வார்டுகளில் தி.மு.க. 171, காங்கிரஸ் 28, அ.தி.மு.க. 42, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 6, விடுதலை சிறுத்தைகள் கட்சி 3, முஸ்லிம் லீக் 3, பா.ஜ.க. 5, சுயேச்சைகள் 36 இடங்களில் வெற்றி பெற்றனர்.

உதகை நகராட்சியில் 36 வார்டுகளில் 198 பேர் போட்டியிட்டனர். இதில் 119 பேர் டெபாசிட் உதகை நகராட்சியில் அ.தி.மு.க. 10 வார்டுகள், பா.ஜ.க. 15 வார்டுகள், நாம் தமிழர் கட்சி 7 வார்டுகள், பா.ம.க. 4 வார்டுகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 3 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ. 2 வார்டுகள், சுயேச்சை வேட்பாளர்கள் 78 பேர் வைப்புத்தொகை இழந்தனர்.

8-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் டெபாசிட் இழந்தார். குன்னூர் நகராட்சியில் 79, கூடலூர் நகராட்சியில் 66, நெல்லியாளம் நகராட்சியில் 38 என மொத்தம் 4 நகராட்சிகளில் 302 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

Updated On: 23 Feb 2022 12:25 PM GMT

Related News