/* */

உதகை தாவரவியல் பூங்காவில் புற்களை பாதுகாக்க நடவடிக்கை

உதகையில் உறைபனி தீவிரமடைந்துள்ளதால் தாவரவியல்பூங்காவில் புற்கள் கருகாமலிருக்க ஸ்பிரிங்ளர் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது.

HIGHLIGHTS

உதகை தாவரவியல் பூங்காவில் புற்களை பாதுகாக்க நடவடிக்கை
X

ஸ்பிரிங்ளர் மூலம் நீர் பாய்ச்சப்படுகிறது.

ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் உதகையில் டிசம்பர் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் உறை பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். இதனால் புல்வெளிகள் கருகும் நிலை ஏற்படும். கடந்த 4 நாட்களாக உதகை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உறை பனியின் தாக்கம் காணப்படுவதால் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானத்தை பாதுகாக்கும் பணியை பூங்கா நிர்வாகம் மேற் கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அதிகாலை 6 மணி முதல் 8 மணி வரை உறை பனியிலிருந்து புற்களை பாதுகாக்கும் வகையில் பூங்காவிலுள்ள புல் மைதானத்திற்கு ஸ்பிரிங்ளர் மூலம் நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சுற்றுலா பயணிகள் புல் மைதானத்துக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Dec 2021 5:56 AM GMT

Related News