/* */

கோடநாடு வழக்கு விசாரணை: 2 வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து அழைத்து வந்து உதகை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணை: 2 வார நீதிமன்ற காவல் நீட்டிப்பு
X

பைல் படம்.

கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், மனோஜ், திபு, சதீசன், சம்சீர் அலி, பிஜின், சந்தோஷ் சாமி, மனோஜ்சாமி, ஜித்தின்ஜாய், உதயகுமார் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் விசாரணை அடிப்படையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால், நெருங்கிய உறவினர் ரமேஷ் ஆகிய 2 பேரை கடந்த அக்டோபர் 25-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து கூடலூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் போலீசார் தனபால், ரமேஷ் ஆகிய 2 பேரை கூடலூர் கிளை சிறையில் இருந்து அழைத்து வந்து உதகை கோர்ட்டில் மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

வழக்கில் கைதான தனபால், ரமேஷ், ஆகிய 2 பேருக்கு மேலும் 2 வாரம் நீதிமன்ற காவலை நீட்டித்து வருகிற டிசம்பர் 20-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 6 Dec 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்