/* */

நீலகிரியில் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு

மேலும் விபரங்களுக்கு 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரியில் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு
X

பைல் படம்.

இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதுப்பித்தல், கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச் சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையதளத்தில் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 29 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...