/* */

முழு ஊரடங்கால் களையிழந்த நீலகிரி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால், நீலகிரியில் முக்கியச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

HIGHLIGHTS

கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக உதகை மையப்பகுதியில் உள்ள சேரிங் கிராஸ் , தாவரவியல் பூங்கா மத்திய பேருந்து நிலையம், கோவை மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோல், கமர்சியல் சாலை, தாவரவியல் பூங்கா சாலை, தொட்டபெட்டா மலைச்சிகரம் செல்லும் சாலை, மத்திய பேருந்து நிலையம், மார்க்கெட், மெயின் பஜார், உள்ளிட்ட சாலைகளும் ஆட்கள் நடமாட்டமின்றி இருந்தன. நகரில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காரணமின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Updated On: 25 April 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!