/* */

ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை கண்டறிய புது யுக்தி

மனித. விலங்குமோதலை தடுக்ககூடலூர் அதை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகள் நடமாட்டத்தை கண்டறிய நவீன தானியங்கி ஒலி பெருக்கி வைக்கப்பட்டது

HIGHLIGHTS

கூடலூரில் மனித விலங்கு மோதலை தடுக்க புதிய முயற்சியாக காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் வருவதை, பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது கருவி, அதே கருவி வனத்துறையினருக்கு உடனடியாக யானை நடமாட்டம் குறித்த குறுஞ்செய்தியையும் அனுப்புகிறது-.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர், பந்தலூர் தாலுகாவில் அண்மைக்காலமாக யானை - மனித விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது .கடந்த 10 ஆண்டுகளில் கூடலூர் , பந்தலூர் தாலுகாவில் 50க்கும் மேற்பட்டோர் காட்டு யானை தாக்கி இறந்துள்ளனர். இந்த நிலையில், மின்வேலியில் சிக்கி பல காரணங்களால் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. கடந்த ஜனவரி மாதம் கிராமப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை தாக்கி தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர்.

மேல் கூடலூர் பகுதியில் ஒருவரும், பஓவேலி பகுதியில் ஒருவரும் ,தேவாலா பகுதியில் இருவர் என அடுத்தடுத்து காட்டுயானைகள் அப்பாவி தோட்டத் தொழிலாளர்களை கொன்றுள்ளது.

கடந்த வாரம் தேவாலா அட்டிப்பகுதியில் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை காட்டு யானைகள் இடித்து நாசம் செய்தது. இதனால் வனத்துறையினர் - பொதுமக்கள் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பல்வேறு போராட்டங்கள் வனத்துறைக்கு இடையே நடைபெற்று வந்தது.

குறிப்பாக யானை - மனித மோதல் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைபெறுகிறது. கூடலூர் , பந்தலூர் தாலுகாவில் முதல் கட்டமாக யானைகள் கிராமப் பகுதிக்குள் நடமாடும் 30 இடங்களை கண்டறிந்னர் வனத்துறையினர்,

அந்தப் பகுதிகளில், வனப்பகுதியில் இருந்து யானைகள் தேயிலைத் தோட்டங்கள் வழியாக வெளியேறி கிராமப்பகுதிக்குள் நுழையும்போது வனத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள, அதிநவீன கேமரா யானைகளை பதிவு செய்வதுடன், யானை வந்துள்ள பகுதி குறித்த குறுஞ்செய்தியை மாவட்ட வன அலுவலர், வனசரகர்கள், யானை விரட்டும் குழுவினர் வரை குறுஞ்செய்தி அனுப்புகிறது.

அத்துடன் யானை அந்தக் கருவியை கடந்து செல்லும்போது ஒலி எழுப்பும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இந்த ஒலி குறைந்தது 10 நிமிடம் சத்தம் எழுப்பும், அப்போது அப்பகுதி மக்கள் யானை வருவதை உணர்ந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்,

அதற்குள் குறுஞ்செய்தியை கண்ட வன ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுவர். வனத்துறையினரின் இந்த புதிய முயற்சி இந்தியாவிலேயே முதல்முறையாக கூடலூர் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 April 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  3. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  5. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  8. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  10. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு