/* */

வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு

பந்திப்பூர் வனப்பகுதியில் வாகனத்தை யானை துரத்திய சம்பவம் சுற்றுலா பயணிகள் உள்ளூர் வாசிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது

HIGHLIGHTS

வனத்துறையினர்  மற்றும் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு
X

நீலகிரி மாவட்டம் முதுமலை வன எல்லைக்குட்பட்ட பந்திப்பூர் வனப்பகுதியில் சாபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் 

நீலகிரி மாவட்டம் முதுமலை வன எல்லைக்குட்பட்ட பந்திப்பூர் வனப்பகுதியில் சாபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியே கர்நாடக மாநில பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் முதுமலையில் உள்ள வாகன சாபாரி போலவே கர்நாடக மாநில பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் வாகன சாபாரி சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது.

அதுசமயம் நேற்று மாலை சுமார் நான்கு மணிக்கு மேல் முதுமலை வன எல்லைக்குட்பட்ட கர்நாடகா,தமிழக வன எல்லை பகுதியில் கர்நாடக மாநில வனத்துறை வாகனம் மூலம் வனப்பகுதிக்குள் நான்கு சுற்றுலா பயணிகளுடன் வனப்பகுதிக்குள் சபாரி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து திடீரென ஒரு யானை சஃபாரி சென்ற வாகனத்தை துரத்த ஆரம்பித்தது.உடனே சுதாரித்துக்கொண்டு ஜீப்பை இயக்கிய வாகன ஓட்டி தனது சாதுரியத்தால் பின்னோக்கி நீண்ட தூரம் வாகனத்தை இயக்கினார்.

பெரும் அச்சத்துடன் சபாரி வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணி தனது கைப்பேசி மூலம் இந்த வீடியோவை காட்சி படுத்தியுள்ளார். திறம்பட வாகனத்தை இயக்கிய வாகன ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் சபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 March 2022 10:37 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்