/* */

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் வரும் 7-ம் தேதி இளைஞர் திறன் திருவிழா

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் வரும் 7-ம் தேதி இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் வரும் 7-ம் தேதி இளைஞர் திறன் திருவிழா
X

தற்போதைய சூழலில் அகில இந்திய அளவில் வேலை இல்லாத பிரச்சினை பெரிய பிரச்சினையாக உள்ளது. படித்த இளைஞர்கள் அவர்களது கனவு திட்டத்திற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறார்கள். வேலை இல்லா பிரச்சினைக்கு முக்கிய காரணம் படித்த இளைஞர்களிடம் அவர்களது கல்வி தகுதிக்கு ஏற்ற திறமை இல்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. எனவே படித்த இளைஞர்கள் வேலை பெறுவதற்கு தேவையான தங்களது தகுதியை வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சி வகுப்புகள் பல இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசை பொறுத்தவரை மாவட்ட வாரியாக இதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இந்த பயிற்சி முகாம்களின் மூலம் இளைஞர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டு போதுமாக தகுதிகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

நாமக்கல் மாவட்டம் வையப்பமலையில் வரும் 7ம் தேதி இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பான இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ் எலச்சிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண், பெண் இருபாலருக்கும் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், பிரதமரின் கவுசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் தாட்கோ போன்ற திட்டங்களின் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, டிரைவிங், உதவி நர்ஸ், நான்கு சக்கர வாகன மெக்கானிக், கம்ப்யூட்டர் பயிற்சிகள், சில்லறை விற்பனை வணிகம், ஃபாஸ்ட் ஃபுட், மொபைல் போன் பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு வசதியாக, இலவச திறன் பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் வகையில், இளைஞர் திறன் திருவிழா வருகிற 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், வையப்பமலை அருகிலுள்ள கவிதாஸ் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. முகாமில் எலச்சிபாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டு, பொருத்தமான பயிற்சினை தேர்வு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இதில் பங்கேற்று தகுதியானவர்கள் பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 5 Oct 2022 5:30 AM GMT

Related News