திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை: கணவர் கைது

காதல் திருமணமாகி 2 மாதத்தில், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவி தற்கொலை: கணவர் கைது
X

பெரிய மணலி அருகே உள்ள ஜேடர்பாளையத்தை சேர்ந்தவர் பிரபு (28). இவர் நாமக்கல்லில் ஒரு ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். இவர், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செல்லப்பன் கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ரம்யா (27) என்பவரை 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இருவரும், சிங்களாந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி பிரபு வழக்கம்போல் நாமக்கல்லுக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவரது மனைவி மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

தகவல் கிடைத்ததும் அங்கு வந்த பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதணைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் இறந்துள்ளதால், இச்சம்பவம் நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா விசாரணை நடத்தினார். அதில் பிரபு அவரது மனைவி மனைவி ரம்யாவை, தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்தது. இதையொட்டி பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் பிரபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 2022-05-14T08:16:56+05:30

Related News

Latest News

 1. திருப்பரங்குன்றம்
  மதுரையில் மாநில அனைத்து தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
 2. பாளையங்கோட்டை
  விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...
 3. இராமநாதபுரம்
  இராமநாதபுரம் அருகே மரத்தில் வேன் மாேதி ஓட்டுனர் உயிரிழப்பு: 23 பேர்...
 4. அரசியல்
  அண்ணாமலை வெளியே நடமாட முடியாது: ஆர்.எஸ். பாரதி பகீரங்க மிரட்டல்
 5. நாமக்கல்
  நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் மன்றம் விழா
 6. இராமநாதபுரம்
  காவல் துறையை கண்டித்து, கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
 7. நாமக்கல்
  நாமக்கல் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி பதவி: திமுகவினர்...
 8. இந்தியா
  சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 9. தமிழ்நாடு
  பருத்தி, நூல் விலை உயர்வு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண முதல்வர் ...
 10. செங்கம்
  விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தவருக்கு அபராதம்