/* */

நாமக்கல்: பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

நாமக்கல்: பிளஸ் 2, 10ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி துவக்கம்
X

பைல் படம்.

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு 6ம் தேதியும், பிளஸ் 1 தேர்வு 10ம் தேதியும் துவங்கி நடைபெற்று முடிவடைந்தது. நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பில், 20 ஆயிரத்து 662 பேர், பிளஸ் 1ல் 19 ஆயிரத்து 842 பேர், பிளஸ் 2வில் 19 ஆயிரத்து 867 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள்கள், ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி மற்றும் காடச்சநல்லூர் எஸ்பிகே மெட்ரிக் பள்ளியிலும் திருத்தப்படுகின்றன. 10ம் வகுப்பு விடைத்தாள்கள், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனம் ஆகிய 2 மையங்களில் திருத்தப்படுகிறது.

ரெட்டிப்பட்டி பாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் ராமன், எஸ்பிகே மெட்ரிக் பள்ளி மையத்துக்கு, திருச்செங்கோடு கல்வி மாவட்ட அலுவலர் விஜயா ஆகியோர் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையமான நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, தளிகை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜராஜன், கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மையத்திற்கு, வில்லிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் ஆகியோர் முகாம் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

முதல் நாளான நேற்று, முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள், விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொண்டனர். இன்று 2ம் தேதி முதல் உதவி தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை துவங்குகின்றனர். நாமக்கல் கல்வி மாவட்டத்துக்கு 40 ஆயிரத்து 700 பிளஸ் 2 விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை திருத்தும் பணியில் 101 முதன்மை தேர்வர்கள் மற்றும் கூர்ந்தாய்வு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். மேலும், உதவி தேர்வர்கள் 571 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருச்செங்கோடு கல்வி மாவட்டத்துக்கு 72 ஆயிரத்து 290 விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவற்றை 92 முதன்மை தேர்வு கூர்ந்தாய்வு அலுவலர்கள், 552 உதவி தேர்வர்கள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். 10ம் வகுப்பு விடைத்தாள் பொறுத்தவரை, நாமக்கல் கல்வி மாவட்டத்துக்கு 32 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை திருத்தும் பணியில், 34 முதன்மை தேர்வு கூர்ந்தாய்வு அலுவலர்கள், 350 உதவி தேர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு கல்வி மாவட்டத்துக்கு, 47 ஆயிரம் விடைத்தாள்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவற்றை திருத்தும் பணியில், 40 முதன்மை தேர்வு கூர்ந்தாய்வு அலுவலர்கள் மற்றும் 400 உதவி தேர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 2 Jun 2022 2:15 AM GMT

Related News