/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 139 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 15 வட்டாரங்களில் உள்ள 139 மையங்களில், இன்று 36,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 139 மையங்களில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் நகராட்சிப் பகுதியில் 29 வது வார்டு ச.பே.புதூர் பிள்ளையார் கோயில் சாவடி, 10வது வார்டு கவிஞர் ராமலிங்கம் தெரு ஆயிர வைசியர் திருமண மண்டபம், 34வது வார்டு அழகு நகர் தொடக்கப்பள்ளி, 11வது மஜீத் தெரு உருது தொடக்கப்பள்ளி, 7வது வார்டு தும்மங்குறிச்சி அரசு பள்ளி, 22வது வார்டு நாமக்கல் பஸ் நிலையம், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி, மாருதிநகர் நடுநிலைப்பள்ளி, நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதா நிலையம் ஆகிய 10 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

திருச்செங்கோடு வட்டாரத்தில் 22 மையங்களிலும், பள்ளிபாளையம் வட்டாரத்தில் 16 மையங்களிலும், இராசிபுரம் வட்டாரத்தில் 10 மையங்களிலும், எருமப்பட்டி வட்டாரத்தில் 8 மையங்களிலும், மோகனூர் வட்டாரத்தில் 8 மையங்களிலும், புதுச்சத்திரம் வட்டாரத்தில் 7 மையங்களிலும், கபிலர்மலை வட்டாரத்தில் 8 மையங்களிலும், பரமத்திவட்டாரத்தில் 10 மையங்களிலும், எலச்சிபாளையம் வட்டாரத்தில் 9 மையங்களிலும், சேந்தமங்கலம் வட்டாரத்தில் 9 மையங்களிலும், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் 9 மையங்களிலும், மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 8 மையங்களிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் 7 மையங்களிலும், கொல்லிமலை வட்டாரத்தில் 6 மையங்களிலும் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இன்று ஒரே நாளில் மொத்தம் 36 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 1 Sep 2021 3:45 AM GMT

Related News