/* */

மோகனூர் அருகே காவிரி ஆற்றில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை

மோகனூர் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே கவதணை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ள முதல்வருக்கு நீர் பாசன விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே  காவிரி ஆற்றில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் கதவணை
X

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து மோகனூர் பகுதி காவிரி பாசன விவசாயிகள், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமாருக்கு பொன்னாடை அணிவித்தனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே விரைவில் ரூ.700 கோடி மதிப்பீட்டில் புதிய கதவனை கட்டப்படும் என்று சட்டசடையில் நடைபெற்ற நீர் வளத்துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து மோகனூர் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கம், நீரேற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் ஆகிய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட திமுக பொறுப்பாளர் ரஜேஷ்குமாருக்கு பொன்னாடை அணிவித்து, மோகனூர் கதவணை திட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பளர் ராஜேஷ்குமார் பேசியதாவது:

திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 100 நாட்களில், தேர்தல் அறிக்கையில் தெரிவித்த 50 சதவீத திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். விவசாயிகளின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று, நாமக்கல் மாவட்டம் மோகனூர், கரூர் மாவட்டம் நெரூர் இடையே, காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.700 கோடி மதிப்பீட்டில், புதிய கதவனை கட்டப்படும் என்று அறிவித்துள்ளார். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் பயன்பெறுவார்கள். மேலும் நாமக்கல், ராசிபுரம், பட்டணம், சீராப்பள்ளி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆண்டு முழுவதும் தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் பல கி.மீ தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டும் உயர்ந்து கிணறுகளில் தண்ணீர் வசதி மேம்படும். முதல்வரிடம் அனுமதி பெற்று விரைவில், விவசாயிகளுடன் சென்னை சென்று அவருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படும்.

தொழில் வளர்ச்சியில் பின் தங்கியுள்ள நாமக்கல் மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மிளகு, வெங்காயம் போன்ற தோட்டக்கலை பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விதை முதல் சந்தைப்படுத்தல் வரை அனைத்து சேவைகளும் வழங்கப்படும். இத்திட்டம் 12 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் செயல்படுத்தப்படும். கொல்லிமலையில் ரூ.50 லட்சத்தில் மிளகு பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும், மேலும், மிளகுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு ஒரு டன் கரும்பு கொள்முதல் விலை ரூ.2,750-ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வர் நாமக்கல் மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து அறிவித்து வருகிறார். நாமக்கல் கவிஞர் அரசு மகளிர் கல்லூரிவளாகத்தில், கவிஞர் ராமலிங்கம்பிள்ளையின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த சிலை திறப்பு விழா நடைபெறும் என்று அவர் கூறினார்.

மோகனூர் நீரேற்று பாசன சபை தலைவர் சுந்தர்ராஜ், செயலாளர் அருணகிரி, இரவை பாசன சங்க தலைவர்கள் ராமலிங்கம், கந்தசாமி, கூட்டுறவு நீரேற்று பாசன சங்க உறுப்பினர் சுப்பிரமணியம், கரும்பு விவசாய சங்க பிரதிநிதி நவலடி, வருதராஜன், ராஜாகண்ணன், பழனிவேல், சதாசிவம்,வாழை விவசாய சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ், உடையவர், சரவணகுமார், வீனஸ் நல்லுசாமி, உழவர் சந்தை விவசாயிகள் சரவணன் கனகராஜ், சுப்பரமணியம், பாலு (எ)தியாகராஜன், பால் உற்பத்தியாளர் பழனியாண்டி உள்ளிட்ட விவசாயிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

Updated On: 24 Aug 2021 10:00 AM GMT

Related News