/* */

நேற்று வழக்குப்பதிவு... இன்று சோதனை! தங்கமணி வீட்டில் ரெய்டு பின்னணி

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

HIGHLIGHTS

நேற்று வழக்குப்பதிவு... இன்று சோதனை! தங்கமணி வீட்டில் ரெய்டு பின்னணி
X

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு நெருக்கமான, சிவில் கான்ட்ராக்டர் சத்யமூர்த்திக்கு சொந்தமான, நாமக்கல் முல்லை நகரில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், தமிழக முன்னாள் முதல்வருக்கு நெருக்கமானவருமான முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள அவர்து பூர்வீக இல்லம் மற்றும் அலுவலகம், அதே போல் நாமக்கல்லில் அவருக்கு நெருக்கமான அரசு ஒப்பந்ததாரர்களான நாமக்கல்லில் உள்ள சத்தியமூர்த்தி இல்லம் மற்றும் அலுவலகம், நல்லிபாளையத்தில் உள்ள தென்னரசுவின் அலுவலகத்தில், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி, இன்பெக்டர் நல்லம்மாள் ஆகியோர் தலைமையில், போலீசார் 3 குழுக்களாக பிரிந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


இதே போல் தங்கமணிக்கு, நெருக்கமான நாமக்கல் பெரியப்பட்டியில் உள்ள கோழி மருந்து விநியோகஸ்தர் மோகனின் வீடு, பரமத்தி வேலூர் அடுத்த வெங்கரையில் அதிமுக இலக்கிய அணியை சேர்ந்த விஜி, மணல் ஒப்பந்ததாரர் பொன்னர் சங்கருக்கு சொந்தமான இடத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தங்கமணிக்கு நெருக்கமான 10 க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை முதல், இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று மாலை, நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதும் அவரது மனைவி சாந்தி மற்றும் அவரது மகன் தரணிதரன் மீது, முதல் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பதிவு முதல் தகவல் அறிக்கையில், நடந்து முடிந்த 2016 மற்றும் 2021 சட்டசபை தேர்தலில், தங்கமணி தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ள வருமானத்தை விட பல கோடி மதிப்பிளான சொத்துக்களை தங்கமணியும் அவரது குடுப்பத்தாரும் நேர்மையற்ற முறையில் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவிக்கின்றனர். சோதனையின் முடிவில் தான், முன்னாள் அமைச்சர் தங்கமணியின் குடும்பத்தார் வருமானத்திற்கு அதிகமாக எத்தனை கோடி சொத்துக்கள் சேர்த்துள்ளன என்பது தெரியவரும்.

Updated On: 15 Dec 2021 4:45 AM GMT

Related News