/* */

நிலங்களுக்கு பட்டா கேட்டு பழங்குடியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்கள் பயிர் செய்யும் நிலங்களுக்கு பட்டா கேட்டு நாமக்கல்லில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நிலங்களுக்கு பட்டா கேட்டு பழங்குடியினர் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
X

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பார்க் ரோட்டில், தமிழ்நாடு பழங்குடியின மக்கள் முன்னற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் ரங்கநாதன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில், தனியார் நிறுவனம் பதிவு செய்துள்ள பழங்குடி மக்களின் நிலங்களின் போலிப் பத்திரங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பழங்குடி மக்கள் பயிர் செய்து வரும் நிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கண்டிசன் பட்டாக்களை மாற்றி நிலப்பட்டா வழங்க வேண்டும்.கொல்லிமலையில் சாதிச் சான்றிதழ் இல்லாமல் இனி எந்த பத்திரப் பதிவும் செய்யக்கூடாது என கொல்லிமலை சார் பதிவாளர் அலுவலருக்கு உத்தரவிட வேண்டும். பழங்குடி மக்கள் பயிர் செய்யும் புறம்போக்கு நிலங்களுக்கு உடனடியாக நிலப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பப்பட்டது. சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், செல்வக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2022 2:15 AM GMT

Related News