/* */

விலை சரிவை தடுக்க ஒரு கோடி முட்டைகள் நேரடி கொள்முதல்: பண்ணையாளர்கள் சங்கம் முடிவு

முட்டை விலை சரிவைத் தடுக்க, ஒரு கோடி முட்டைகளை நேரடி கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

விலை சரிவை தடுக்க ஒரு கோடி முட்டைகள் நேரடி  கொள்முதல்: பண்ணையாளர்கள் சங்கம் முடிவு
X

 பைல் படம். 

இதுகுறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சிங்கராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

முட்டை தேக்கத்தால், முட்டை விலை சரிவு ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் முட்டை நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து, சங்கம் மூலம் 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் 48 கிராம் முதல் 50 கிராம் எடையுடைய முட்டைகளை என்இசிசி நிர்ணத்யிதுள்ள விலையான ரூ. 4.40-இல் இருந்து 70 காசுகள் குறைவாகவும், 50 கிராம் முதல் 52 கிராம் எடையுடைய முட்டைகளை 60 காசுகள் குறைவாகவும், சுமார் ஒரு கோடி முட்டைகள் நேரடியாக கொள்முதல் செய்யப்பட உள்ளன. முட்டை விற்பனை செய்ய விரும்பும் பண்ணையாளர்கள் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தை 94432- 62797 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (என்இசிசி) ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், முட்டைகள் தேக்கத்தைக் கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள ஒரு முட்டை பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.40 ஆக நீடிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.

கோழி விலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.90 ஆக பிசிசி நிர்ணயித்துள்ளது. முட்டைக்கோழி விலை ஒரு கிலோ ரூ.95 ஆக பண்ணையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 18 July 2022 4:18 AM GMT

Related News