/* */

சூறைக்காற்றால் சேதமான வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க கொமதேக கோரிக்கை

namakkal news, namakkal news today- நாமகிரிப்பேட்டை அருகே, சூறைக்காற்றால், வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கொமதேக வேண்டுகோள் விடுத்துள்ளது.

HIGHLIGHTS

சூறைக்காற்றால் சேதமான வாழை மரங்களுக்கு  நிவாரணம் வழங்க கொமதேக கோரிக்கை
X

namakkal news, namakkal news today- சூறைக்காற்றால் சேதமான வாழை மரங்கள் (கோப்பு படம்)

namakkal news, namakkal news today- இதுகுறித்து, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விவசாய அணி மாநில இணை செயலாளர் சந்திரசேகர், ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த முள்ளுக்குறிச்சி, ஊனந்தாங்கல், மூலக்குறிச்சி, பொரப்பன்சோலை, மெட்டாலா, பெரியகோம்பை உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் முள்ளுக்குறிச்சி, மெட்டாலா, பொரப்பன்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் இரவு பரவலாக சூறைக்காற்றுடன் கோடை மழை பெய்தது. அப்போது பலத்த சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பெரப்பன் சோலை, சூரியன் காடு பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் தோட்டத்தில், சுமார் 3 ஏக்கரில், பயிரிடப்பட்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தது, நாசமானது. அவை அனைத்தும் உயர் ரக செவ்வாழை ரக வாழை ஆகும். முறிந்து விழுந்து நாசமான வாழைகளின் மதிப்பு சுமார் 15 முதல் 20 லட்சம் வரை இருக்கும். குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தார்கள் இன்றைய மார்க்கெட் நிலவரப்படி ஒரு வாழைதார் ரூ. 500 லிருந்து 800 வரை விலை போகிறது. இந்நிலையில் பலத்த காற்றுக்கு 2,000 வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமாகி உள்ளது. இதன் மூலம் அந்த விவசாயிக்கு ரூ. 15 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக, சூறைக்காற்று வீசிய பகுதியை ஆய்வு செய்து, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 21 May 2023 4:45 AM GMT

Related News