/* */

நாமக்கல் ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில் ரேசன் கடைகளை மாவட்ட கலெக்டர் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் ரேசன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு
X

நாமக்கல் அருகில் உள்ள ரேசன் கடைகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீரென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் காதப்பள்ளி ரேசன் கடை, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பொம்மம்பட்டி ரேசன் கடைகள் ஆகிவற்றை கலெக்டர் ஸ்ரேயா சிங் திடீரென பார்வையிட்டு ஆய்தார். அப்போது கடைகளில் விற்பனை போக மீதமுள்ள பொருட்களின் இருப்பு சரியாக உள்ளதா என்று சரிபார்த்தார். பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் ரேசன் கடைகள் சரியான நேரத்தில் திறக்கப்படுகிறதா என்றும், ரேசன் பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறதா என்றும், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்களா என்றும் கலெக்டர் கேட்டறிந்தார்.

விற்பனையான பொருட்களின் தொகை விபரங்களை, விற்பனை கருவியினை இயக்கி அதனடிப்படையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களின் இருப்பு குறித்து பார்வையிட்டு சரிபார்த்தார். இந்த ஆய்வின்போது விற்பனை செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் விபரம் குறித்த பதிவுகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் சரிபார்த்தார். இந்த ஆய்வின் போது அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 Sep 2021 1:15 PM GMT

Related News