/* */

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2023ம் ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு துவக்கம்

Namakkal Anjaneyar Temple Online Booking-நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2023ம் ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு இன்று துவங்கியது.

HIGHLIGHTS

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2023ம் ஆண்டிற்கான அபிஷேக முன்பதிவு துவக்கம்
X

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் முன்பதிவு செய்வதற்காக பக்தர்கள் வரிசையில் நின்றனர்.

Namakkal Anjaneyar Temple Online Booking

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில், 2023ம் ஆண்டிற்கான, அபிசேக முன்பதிவு துவங்கியது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று முன்பதிவு செய்தனர்.

நாமக்கல் கோட்டையில் ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் எதிரில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் சுவாமி, சாந்த சொரூபியாக வணங்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும், இந்தியா முழுவதும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தரும் திரளான பக்தர்கள் ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, தினசரி காலை 9 மணிக்கு ஸ்ரீ 1008 வடைமாலை அலங்காரம் நடைபெற்று தீபாராதணை நடைபெறும். தொடர்ந்து 10 மணிக்கு வடை மாலை கழற்றப்பட்டு, மஞ்சள், குங்குமம், நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள், திருமஞ்சள், 1008 லிட்டர் பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிசேகம் நடைபெறும். இதனையடுத்து சுவாமிக்கு மலர் அங்கி, வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், முத்தங்கி போன்ற சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கும், கட்டளைதாரர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் மற்றும் அபிசேகம் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே கட்டளைதாரர்கள் மூலமாக நடைபெறும். இதற்காக கட்டளைதாரர்கள் ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்துகொள்வது வழக்கம். ஒரு நாள் வடை மாலை சார்த்துபடி மற்றும் அபிசேகத்திற்கு தலா ரூ.6 ஆயிரம் வீதம் 5 பேர் முன்பதிவு செய்துகொள்ளலாம். வடைமாலை மற்றும் அபிசேகத்திற்கு தேவையாகன பொருட்கள், பூ மாலைகள், தேங்காய், பழங்கள் உள்ளிட்ட அனைத்தும் கோயில் நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும். இது தவிர வெள்ளிக்கவசம், தங்கக்கவசம், மலர் அங்கி, முத்தங்கி, மாலையில் தங்கத்தேர், சந்தனக்காப்பு, வெண்ணைக்காப்பு அலங்காரத்திற்கு தனியாக கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆஞ்சநேயர் ஜெயந்தியன்று 1 லட்சத்து 8 வடை மாலை அலங்காரம் கட்டளைதாரர் மூலம் நடைபெறும்.

வருகிற 2023ம் ஆண்டிற்கான ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி அபிசேகத்திற்கு, இன்று 13ம் தேதி முதல் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு துவங்கியது. கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறை, உதவி கமிஷனருமான இளையராஜா அபிசேக முன்பதிவை துவக்கி வைத்தார். ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட கியூவில் நின்று, முன்பணம் செலுத்தி தங்களுக்கு விருப்பமான தேதியில் அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்ய முன்பதிவு செய்து ரசீது பெற்றுச் சென்றனர். முதன் முறையாக செல்போன் மூலம் பணம் செலுத்துவதற்கு கியு ஆர் கோடு வசதி செய்யப்பட்டிருந்தது. ஒரு ஆண்டிற்கான தேதிகள் முன்பதிவு முடியும் வரை பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 Feb 2024 9:16 AM GMT

Related News