/* */

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: 3 கிலோ தங்கம், ரூ.10 கோடி உதவி

நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், 2 கிலோ தங்கம், ரூ.10 கோடி நிதி உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

HIGHLIGHTS

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்: 3 கிலோ தங்கம், ரூ.10 கோடி உதவி
X

நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு தங்கக்காசு மற்றும் நிதி உதவியை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் கலெக்டர் ஸ்ரேயாசிங், எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏ ராமலிங்கம் ஆகியயோர்.

நாமக்கல் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ராஜ்சயபா எம்.பி. ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தங்கக்காசு மற்றும் நிதி உதவி வழங்கினார். நிகழ்ச்சியில் 10, 12ம் வகுப்பு படித்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவியுடன் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது. டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 10, 12ம் வகுப்பு படித்த 824 பெண்களுக்கு ரூ.2 கோடியே 6 லட்சம் திருமண நிதி உதவி, டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்த 1,676 பெண்களுக்கு ரூ.8 கோடியே 38 லட்சம் உதவித்தொகை மற்றும் தலா 8 கிரம் தங்கம் வழங்கப்பட்டது. மொத்தம் திருமண நிதி உதவியாக ரூ.10 கோடியே 44 லட்சம் மற்றும் ரூ.9 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரத்து 406 மதிப்புள்ள 20 கிலோ தங்கம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2.75 கோடி நிதி உதவி வழங்கப்பட்டது. பெற்றோர்களில் ஒருவரை இழந்த குழந்தைகக்கு ரூ.3 லட்சம் மற்றும் இரண்டு பெற்றோர்களையும் இழந்த சிறுவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் 288 மனுக்கள் வரப்பெற்றுள்து. முதல் கட்டமாக 91 பேருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்றவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Updated On: 4 Jan 2022 1:00 PM GMT

Related News