/* */

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!

வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் தொழிலாளர் உதவி கமிஷனர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
X

கோப்பு படம்

நாமக்கல்.

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்று ஓட்டுப்போடும் வகையில், சம்மந்தப்பட்ட ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வருகிற 26ம் தேதி மற்றும் மே 7, மே 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அங்கு நடைபெறும் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை உறுதி செய்ய ஏதுவாக, வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்று ஓட்டளிக்கும் வகையில், சம்மந்தப்பட்ட ஓட்டுப்பதிவு நாட்களில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 18வது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி, ஜூன் 1ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. தற்போது நடப்பில் உள்ள இந்திய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் இந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

அதற்குள் புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வுசெய்ய வேண்டும். புதிய நாடாளுமன்றத்தைத் தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு, இந்த ஆண்டு மார்ச் 16ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்தத் தேர்தல்கள் ஏழு கட்டங்களாக நடக்கின்றன. ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி 94 தொகுதிகளுக்கும் மே 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும் மே 20ஆம் தேதி 49 தொகுதிகளுக்கும் மே 25ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் ஜூன் 1ஆம் தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன.

Updated On: 24 April 2024 10:15 AM GMT

Related News