/* */

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்கம்

தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்க விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்கம்
X

தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் தேசிய டிஜிட்டல் லைப்ரரி துவக்க விழாவில், கல்லூரி சேர்மன் பெரியசாமி பேசினார்.

தோளூர்ப்பட்டியில் உள்ள கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியின், நூலகத்துறை சார்பில் தேசிய டிஜிட்டல் நூலக மன்ற துவக்கவிழா நடைபெற்றது. கல்லூரி சேர்மன் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து டிஜிட்டல் லைப்பரரியை துவக்கி வைத்தார். திருச்சங்கோடு கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரி நூலக இயக்குனர் வெங்கடாஜலம், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, தேசிய டிஜிட்டல் லைப்ரரியின் வெப்சைட்டை உபயோகிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடு குறித்து விளக்கி கூறினார். கேஎஸ்ஆர் கல்லூரி உதவி போராசிரியர் தங்கதுறை இண்டர்நெட் மூலம் பாடங்கள் கற்பதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். திரளான பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக கல்லூரி நூலகர் நடராஜன் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் தர்மலிங்கம் நன்றி கூறினார்.

Updated On: 9 Dec 2021 8:28 AM GMT

Related News