/* */

ஈமு பண்ணை மோசடி: ஈரோடு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை

நாமக்கல் பகுதி முதலீட்டாளர்களிடம், டெபாசிட் பெற்று மோசடி செய்த, ஈரோடு ஈமு பண்ணை அதிபருக்கு, கோர்ட்டில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈமு பண்ணை மோசடி: ஈரோடு நிறுவன உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை
X

ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த மாறன் (எ) மாரிமுத்து மகன் குரு (எ) குருசாமி மற்றும் கதிர்வேல், அமுதன், சுரேஷ், சுந்தரமூர்த்தி, மகாராஜா, விஜயகுமார், செந்தில் (எ) செந்தில்குமார் ஆகியோர் ஈமு பண்ணை நடத்தி வந்தனர். அந்த பண்ணை மூலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 96 முதலீட்டாளர்களிடம், ரூ. 2 கோடியே 39 லட்சத்து, 15 ஆயிரத்து 600 டெபாசிட் பெற்று மோசடி செய்ததாக, முதலீட்டாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.

இது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து, 2012ல் ஈமு பண்ணை நிர்வாகிகளை கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கோவை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரவி, தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதில் குற்றம் சாட்டப்பட்ட ஈமு பண்ணை அதிபர், குரு (எ) குருசாமிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 2.40 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், குற்றம் நிரூபிக்கப்படாததால் ஈமு பண்ணை நிர்வாகிகள் கதிர்வேல், அமுதன், சுரேஷ், சுந்தரமூர்த்தி, மகாராஜா, விஜயகுமார், செந்தில் (எ) செந்தில்குமார் ஆகிய 7 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Updated On: 22 Sep 2021 3:45 PM GMT

Related News