/* */

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவீன முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி வருகிற 23ம் தேதி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில்  நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி
X

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, வேளாண்மை அறிவியல் நிலையத்தில், நபார்டு வங்கியின் வேளாண்மை அபிவிருத்தி நிதி திட்டத்தின் கீழ், வருகிற 23ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு அறிவியல் ரீதியான நாட்டுக்கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒருநாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில், நாட்டுக்கோழி இனங்கள், நவீன முறையில் கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, குஞ்சு பொரிக்கும் விதம், இன்குபேட்டர்களின் பயன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அத்துடன், நாட்டுக்கோழிகளைத் தாக்கும் நோய்கள், அறிகுறிகள் மற்றும் அவற்றைத் தடுக்கும் முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்படும்.

இப்பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மையத்தின் தலைவர் டாக்டர் அகிலா தெரிவித்துள்ளார்.

Updated On: 19 July 2021 2:36 AM GMT

Related News