/* */

நாமக்கல் கூட்டுறவு செசைட்டியில் ரூ.39 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.39 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை செய்யப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கூட்டுறவு செசைட்டியில் ரூ.39 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்
X

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டிற்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த பருத்தி மூட்டைகள்.

நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் கூட்டுறவு விற்பனை சங்கம் (என்சிஎம்எஸ்) உள்ளது. இங்கு வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.

இந்த வாரம் இன்று நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், மோகனூர், பரமத்தி, வேலூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,800 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர். திருச்செங்கோடு, கொங்கணாபுரம், ஈரோடு, அவிநாசி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஏலத்தில் ஆர்சிஎச் ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ. 5,500 முதல் 7,870 வரையிலும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் ரூ.3,595 முதல் 5,395 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ. 39 லட்சம் மதிப்பிலான பருத்தி ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

Updated On: 16 May 2023 11:45 AM GMT

Related News