/* */

இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு சான்றிதழ்

பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிக அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

HIGHLIGHTS

இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு சான்றிதழ்
X

நாமக்கல் மாவட்டத்தில், பிரதமர், தமிழக முதல்வரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ், அதிக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் சான்றிதழ்களை வழங்கினார்.

பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் அதிக அளவு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர்களுக்கு கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தேசிய டாக்டர்கள் தினத்தை முன்னிட்டு, தேசிய சுகாதார ஆணையம் ஏற்பாடு செய்த மருத்துவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கும் நிகழ்ச்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னையிலிருந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இதில் பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டங்களின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட டாக்டர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் மேற்கண்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி, ஆஸ்பத்திரியின் எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சரவணன், நாமக்கல் தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் குழந்தைவேலு ஆகியோருக்கு கலெக்டர் ஸ்ரேயா சிங் சான்றிதழை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தா அருள்மொழி, மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ராஜ்மோகன், பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரபாகரன், சமூக பாதுகாப்புத்திட்ட சப்-கலெக்டர் தேவிகாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2022 10:45 AM GMT

Related News