/* */

நோயாளிகளின் சிகிச்சைக்கு பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.17.50 லட்சம் உதவி

நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர்களின் மருத்துவ செலவுக்கு, ராஜேஷ்குமார் எம்.பி பரிந்துரையின் பேரில், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.17.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நோயாளிகளின் சிகிச்சைக்கு பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.17.50 லட்சம் உதவி
X

ராஜேஷ்குமார், எம்.பி.,

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான ராஜேஷ்குமார், கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஜ்யசபா எம்.பியாக பொறுப்பேற்றார். இதுவரை அவர், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பல்வேறு நபர்களுக்கு, இது வரை ரூ.17.50 லட்சத்தை மருத்துவ சிகிச்சைக்காக பெற்றுக்கொடுத்துள்ளார்.

சேந்தமங்கலம் சாலையூரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்ற குழந்தை நுரையீரல் சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம், பரமத்தி வேலூர் தாலுக்கா வடுகபாளையம்,அருந்ததியர் தெருவைச் சேர்ந்த ராதா என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.3 லட்சம், பரமத்திவேலூர் தாலுக்கா மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம், நாமக்கல் தாலுக்காக நல்லிகவுண்டன்புதூரைச் சேர்ந்த தமிழ்செல்வி என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.2 லட்சம், மலைவேப்பன்குட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.3 லட்சம், என்.கொசவம்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம், நறுவலூரைச் சேர்ந்த சின்னுசாமி என்பவரின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம், சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம், நாமக்கல் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த சுகுமாரி என்பவரின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 3 லட்சம் என மொத்தம் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் பிரதமரின் தேசிய நிவாண நிதியின் மூலம் ராஜேஷ்குமார் எம்.பி பரிந்துரையின் பேரில் பெற்றுக்கொடுத்துள்ளார்.

Updated On: 12 Aug 2022 10:30 AM GMT

Related News