/* */

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய கோரிக்கை

கொரோனா காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய, பவானி பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட கடைகளின் வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று, பவானி பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள், நகராட்சி கமிஷனர் லீனா சைமனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கொரோனா முதல், இரண்டாம் அலையின் போது, தமிழக அரசு அறிவிப்பின்படி பவானி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்த போதும், இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில், கொரோனா பரவலின் போது மூடபட்டிருந்த காலத்துக்கு, வாடகை செலுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். எனவே, கடைகள் மூடப்பட்ட காலத்துக்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் சங்க தலைவர் தனபால், செயலர் மாணிக்கராஜ், ஒருங்கிணைப்பாளர் யாழினி உள்ளிட்ட பலர் நகராட்சி கமிஷனரிடம் மனு வழங்கினர்.

Updated On: 21 Oct 2021 9:18 AM GMT

Related News