/* */

நாகை: 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து இளைஞர் சாதனை

நாகையில், கின்னஸ் சாதனை முயற்சியாக, 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் இளைஞர் கார்த்திக் ராஜா ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.

HIGHLIGHTS

நாகை: 10 மணி நேரத்தில் 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து இளைஞர் சாதனை
X

கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா, 10 மணி நேரம் 17 நிமிடத்தில் மிக பெரிய ஓவியத்தை வரைந்தார். 

நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. சிறுவயது முதலிலேயே ஓவியம் மீது தீராத காதல் கொண்டிருந்த அவர், ஓவியத்தில் சாதிக்க வேண்டுமென முயற்சி செய்து வந்தார். அவ்வகையில், தற்போது 6857 சதுர அடியில் ஓவியம் வரைந்து அசத்தி உள்ளார். நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த வேர்ல்டு ரெக்கார்டு கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்ட கார்த்திக் ராஜா, 10 மணி நேரம் 17 நிமிடத்தில் மிக பெரிய ஓவியத்தை வரைந்தார்.


அதன்படி, 6857 சதுர அடியில் வரையப்பட்ட ஓவியத்தில், 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலையின் பாதிப்புகள் குறித்த விவரம், உயிரிழப்புகள் விவரம், என உலகின் தனி நபர் ஓவியத்தை வரைந்து காட்டியுள்ளனர். காகிதத்தை தரையில் ஒட்டி கருப்பு சாயங்களால் கார்த்திக்ராஜா தீட்டியுள்ள ஓவியம் சுனாமியின் போது இருந்த நினைவுகளை எடுத்துரைத்தது.

சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவுகளை போற்றும் வகையில் ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறியுள்ள கார்த்திக் ராஜா, கின்னஸ் உலக சாதனை முயற்சிக்கு ஊக்கமாக இருந்த நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். கார்த்திக் ராஜாவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?