/* */

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புரட்டாசி பொங்கல் விழா

திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். அன்று மாலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்தனர்

HIGHLIGHTS

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே புரட்டாசி பொங்கல் விழா
X

சோழவந்தான் அருகே நடுமுதலை கிராமத்தில் விநாயகர் திருவிழா, பெருமாள் திருவிழா, வடக்கு செல்லியம்மன் திருவிழா மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே நடுமுதலைக் குளம் கிராமத்தில், புரட்டாசி பொங்கல் திருவிழா ஒரு வாரம் நடந்தது.

வருடந்தோறும், புரட்டாசி பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும். தினசரி நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால், இப்பகுதியில் திருவிழா களைகட்டி நடக்கும்.

அரசு கட்டுப்பாடு உள்ளதால், இந்த ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழா மிகவும் எளிமையாக கொண்டாடினார்கள். இவ்விழாவை முன்னிட்டு, விநாயகர் திருவிழா, பெருமாள் திருவிழா, வடக்கு செல்லியம்மன் திருவிழா மற்றும் முத்தாலம்மன் கோவில் திருவிழா நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு, பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து வந்தனர். அன்று மாலை பெண்கள் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வந்தனர். இரவு கிராமிய பாடல் கலை நிகழ்ச்சி நடந்தது. மறு நாள் காலை கரகம் எடுத்து ஊர்வலம் சென்று முளைப்பாரி கரைத்தனர். இளைஞர்கள் பல்வேறு வேடம் அணிந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். நிறைவாக, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.

Updated On: 2 Oct 2021 4:07 PM GMT

Related News