/* */

மதுரையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு

தோட்டக்கலைத் துறை சார்பாக மாவட்ட அளவில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்களை சிறப்பாக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பரிசு

HIGHLIGHTS

மதுரையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தோட்டக்கலைத் துறையின் சார்பாக மாவட்ட அளவில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்களை சிறப்பாக சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

தமிழ்நாடு அரசு தோட்டக்கலைத் துறையின் மூலம் தரிசு நிலங்களில் வேளாண் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ,தோட்டக்கலை துறையின் மூலம் தரிசு நிலங்களில் தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்து சிறப்பாக செயல்படும் விவசாயிகள் தேர்வு செய்து பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் இந்த விருதுக்காக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தோட்டக்கலை துணை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய நிபுணர் குழு சம்பந்தப்பட்ட விளைநிலம் மற்றும் விவசாயிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, நீர் மேலாண்மையில் நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல் ஊடுபயிர் சாகுபடி முறையினை பின்பற்றுதல் இயற்கை முறையில் சாகுபடி செய்தல் பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுதல் போன்ற பல்வேறு தரவுகளை அளவுகோலாக கொண்டு மூன்று விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர், கொட்டாம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயி செ.ராஜா முதல் பரிசு ரூ.15,000 - மற்றும் சான்றிதழ் கள்ளிக்குடி வட்டாரத்தை சேர்ந்த விவசாயி அ.சூரிய நாராயணன் இரண்டாம் பரிசாக ரூ.10000 மற்றும் சான்றிதழ் டி.கல்லுப்பட்டி வட்டாரத்தை சேர்ந்த விவசாயி சீ. ஜெயகிருஷ்ணன் மூன்றாம் பரிசாக ரூ.5000 மற்றும் சான்றிதழ் என தேர்வு பெற்ற விவசாயிகளுக்கு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வின் போது, வேளாண்மை துறை இணை இயக்குனர் விவேகானந்தன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) இ.ராணி உட்பட வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 22 April 2022 3:00 PM GMT

Related News