/* */

தமிழகத்தில் கிராம சாலைகளை போட்டது அதிமுக அரசு: முன்னாள் அமைச்சர் உதயகுமார்

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மட்டும் 93 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் ஊரக பகுதிகளில் சாலைகள் போடப்பட்டது

HIGHLIGHTS

தமிழகத்தில் கிராம சாலைகளை போட்டது அதிமுக அரசு: முன்னாள் அமைச்சர் உதயகுமார்
X

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை  செய்தார்.

தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மட்டும் 93 ஆயிரம் கிலோ மீட்டர் அளவில் ஊரக பகுதிகளில் சாலைகள் போடப்பட்டது. திமுக ஆட்சியில் தற்ற்போது மதுரை மாவட்டத்திற்கு சாலை பணி திட்டத்திற்க்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் முதலமைச்சருக்கு கேள்வி எழுப்பினார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று கூறிய பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழை எடுத்து கூறும் வகையில், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் 1.55 லட்சம் கி.மீ கிராமப்புற மற்றும் ஊரக வளர்ச்சி சாலைகள் உள்ளது, கடந்த எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மட்டும் 21,085 கோடி மதிப்பில், 92,887 கிலோ மீட்டர் ஊரக சாலைகளை அமைக்கப்பட்டன, தற்போது சாலையில் எல்லாம் மிகவும் பழுதடைந்து உள்ளது.

மதுரை மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் மாநகராட்சி ,3 நகராட்சி, 9 பேரூராட்சி, 420 கிராம பஞ்சாயத்து, 655 வருவாய் கிராமங்கள் உள்ளது ஏறத்தாழ 3710 கிலோமீட்டர் சதுர அடி கொண்ட மதுரையில் 30 லட்சம் பேர் வசிக்கின்றனர் மதுரை மாநகராட்சி மட்டும் 1253 சதுர கிலோமீட்டர் அளவில் குடியிருப்புச் சாலைகள் உள்ளது. தற்பொழுது நெடுஞ்சாலை துறையில் நடைபாண்டில் 18,218 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கும் சாலை பணிகளுக்காக எவ்வளவு நிதி என்று கூறவில்லை, அதேபோல் ஊரக கிராமப்புற சாலைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை தெரியவில்லை,

புரட்சித் தலைவர் சத்துணவு திட்டத்தை தொடங்கி மகத்தான சாதனை படைத்தார் ,அம்மா ஆட்சி காலத்திலும், எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சிறப்பாக செய்யப்பட்டது, தற்போது முதலமைச்சர் காலை சிற்றுண்டியை தொடங்கியுள்ளார் இதன் பயன் செயல் வடிவில் தான் தெரியும், முப்பெரும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் முல்லைப் பெரியாறு, 58 கால்வாய் குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி அடையும் வகையில் அறிவிப்பு வெளியிடுவார் என்று விவசாயிகள் நம்பிக்கையுடன் உள்ளனர், ஜாக்டோ ஜியோ மாநாட்டில் அரசு பட்டை நாமம் சார்த்தியது போல் முப்பெரும் விழாவில் திட்டங்கள் அறிவிப்பாரா இல்லை மக்களுக்கு மட்டும் பட்டைநாமம் சார்த்துவாரா என்று மக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

Updated On: 15 Sep 2022 8:00 AM GMT

Related News