/* */

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
X

முத்தப்பா.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகி புரத்தை சேர்ந்தவர் முத்தப்பா (வயது 50) டேங்க் ஆபரேட்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன் உள்ளனர். முத்தப்பா சூளகிரி வாணிபர் தெருவில் ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

குடும்ப பிரச்சினை காரணமாக முத்தப்பா வீட்டின் மேல் பகுதியில் உள்ள அறையில் தங்கி இருந்தார். மேலும் குடும்பத்தினருடன் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இரவு முத்தப்பா அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அவருடைய மனைவி, மகன் மேலே சென்று கதவை திறந்து பார்த்தனர். அப்போது முத்தப்பா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது தலை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து அவர்கள் சூளகிரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது முத்தப்பா வெட்டிக்கொலை செய்யப்பட்டு 2 நாட்கள் ஆனது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முத்தப்பாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூளகிரியில் டேங்க் ஆபரேட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 2 Feb 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  2. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  5. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  7. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  9. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  10. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!