/* */

தேன்கனிக்கோட்டை: காட்டு யானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, காட்டு யானை தாக்கி விவசாயி பலியானார்.

HIGHLIGHTS

தேன்கனிக்கோட்டை: காட்டு யானை தாக்கி விவசாயி பலி
X

யானை தாக்கி பலியான முனுசாமியின் குடும்பத்திற்கு, ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கிய, உதவி வன பாதுகாவலர் கார்த்தியாயினி. 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா பெட்டமுகிலாளம் அருகே உள்ள புல்லள்ளி மலை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி கவுண்டர் ( 85).விவசாயி. இவர் நேற்று, கடமன்குட்டை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார். அந்த நேரம், மாரண்டஹள்ளி காப்பு காட்டில் சுற்றி திரிந்த ஒற்றை யானை ஒன்று அவரை விரட்டி தாக்கியது. இதில் முனுசாமி கவுண்டர் பரிதாபமாக இறந்தார்.

வனப்பகுதியில் யானை தாக்கி அவர் இறந்து கிடப்பது குறித்து, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார், வனவர் ஆனந்த் மற்றும் வனத்துறையினர், தேன்கனிக்கோட்டை சப்&இன்ஸ்பெக்டர் ரகுநாதன் தலைமையிலான போலீசார் இன்று காலை, உடல் கிடந்த இடத்திற்கு சென்றனர். மூங்கிலில் தூளி கட்டி அவரது உடல் மீட்டு கொண்டு வரப்பட்டது.

பின்னர் முனுசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிர் இழந்த முனுசாமியின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகையை, உதவி வன பாதுகாவலர் கார்த்தியாயினி வழங்கினார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 24 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்