/* */

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
X

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு,  பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் இன்று  திறந்து வைத்தனர்.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் இன்று (22.12.2023) திறந்து வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 130 நாட்களுக்கு இரண்டாம் போக விவசாய பாசனத்திற்காக தண்ணீரை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் இன்று (22.12.2023) திறந்து வைத்தனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டம், கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது மற்றும் இடதுபுற பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்காக விவசாய பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று 9,012 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 22.12.2023 முதல் 29.4.2024 வரை 130 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்தில் தற்பொழுது உள்ள நீர் அளவினை கொண்டும் நீர் வரத்தினை எதிர்நோக்கியும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து வலதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 75 கன அடி வீதமும், இடதுபுற கால்வாய் மூலம் வினாடிக்கு 76 கன அடி வீதமும் என மொத்தம் 151 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதன் மூலம் கிருஷ்ணகிரி வட்டத்திலுள்ள, பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், சௌட்டஹள்ளி, தளிஹள்ளி, கால்வேஹள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஹள்ளி, எர்ரஹள்ளி, பெண்ணேஸ்வர மடம், காவேரிப்பட்டிணம், பாலேகுளி, மாரிசெட்டிஹள்ளி, நாகோஜனஹள்ளி, ஜனப்பரஹள்ளி மற்றும் பையூர் ஆகிய 16 ஊராட்சிகளில் உள்ள 9,012 ஏக்கர் நஞ்சை விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.

கிருஷ்ணகிரி அணையின் நிலவரம் (22.12..2023) அணையின் தற்போதைய கொள்ளவு 51 அடி, அணையின் நீர்வரத்து 156 கன அடியாகும். ஊற்றுக் கால்வாயில் 12 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. எனவே பெருமக்கள் விவசாயத்திற்கு நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் நீர் பங்கீட்டு பணிகளில் நீர்வள ஆதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சிர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் அறிவொளி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் சையத், வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பி.எஸ்.சித்ரா, துணை வேளாண்மை அலுவலர் கணபதி, வட்டாட்சியர் விஜயகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட விவசாய பெருமக்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2023 4:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா