/* */

தென்னை, மா, வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் கண்காட்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் மா, தென்னை, வாழையில் மதிப்புக்கூட்டுப் பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்னை, மா, வாழையில்  மதிப்புக்கூட்டுப் பொருட்கள் கண்காட்சி
X

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில், ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின்கீழ், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்களை வேளாண் பயிலும் மாணவர்கள் தங்கி பல்வேறு பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

வேளாண் பயிலும் மாணவர்கள், பையூரில் மா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் கண்காட்சியினை நடத்தி, விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். அதன்படி, மாவில் மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாங்காய் மிட்டாய்கள், ஜாம் மற்றும் ஜெல்லி, மா ஊறுகாய், மா பழச்சாறு, மாவடு போன்ற பொருட்கள் பார்வைக்கு வைத்திருந்தனர்.

உதிரும் மா பிஞ்சுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பதற்கும், மாங்காயில் சிறுதொழில் தொடங்கும் வகையில் மா ஊறுகாய் பாக்கெட்டுகள் செய்வதற்கும் செயல் விளக்கம் அளித்தனர். மா ஊறுகாய் தயாரிக்க, நறுக்கப்பட்ட மாங்காய் துண்டுகள் உப்புக்கரைசலில் ஊரவைக்கப்பட வேண்டும். பின்பு அதை உலர்த்தி ஊறுகாய்க்கான மசாலாவுடன் சேர்த்து பாக்கெட்டுகளாக போட வேண்டும் என்று விளக்கினர்.

தென்னையில் பிஸ்கெட்டுகள், மிட்டாய்கள், அழகு சாதன பொருட்கள், தேங்காய் எண்ணெய், தென்னை இளநீரை பயன்படுத்தி தயாரிக்கும் உணவுப் பொருட்கள், தேங்காய் பாலில் உற்பத்தி செய்யப்பட்ட சோப்பு, தோய்காய் திப்பிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட லட்டு, தேங்காய் பர்பிகள் போன்றவை பார்வைக்கு வைத்திருந்தனர். தேங்காய் கொப்பரையில் இருந்து தேங்காய் எண்ணெய் பிரித்தெடுப்பது, தேங்காய் சோப்புகள் தயாரிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.

இதே போல் வாழையில், வாழைக்கழிவு உரங்கள், வாழை சிப்சுகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் (ஜெல்லி, ஜாம்), வாழைப்பழச்சாறுகள் போன்றவை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்தும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாணவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 April 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  2. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  3. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  4. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  5. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  6. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  7. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  10. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!