/* */

கிருஷ்ணகிரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்

கிருஷ்ணகிரி நகரில் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்
X

கிருஷ்ணகிரியில் பறிமுதல் செய்யப்பட்ட  புகையிலை பொருட்கள்.

கிருஷ்ணகிரி நகரில் ராசுவீதி பகுதியில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

இதையடுத்து நகர போலீஸ் ஆய்வாளர் கபிலன், உதவி ஆய்வாளர் சிவசந்தர் ஆகியோர் அதிரடியாக அந்த கடையில் சோதனை நடத்தினார்கள். அந்த சோதனையில் 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 104 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குட்காவை பதுக்கிய கிருஷ்ணகிரி கோ-ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்த மங்களராம் (25), அவரது தம்பி மகேந்தர் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்து, பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 15 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...