/* */

மதகு அருகில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை

கிருஷ்ணகிரி அணை மதகு அருகில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

மதகு அருகில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை   அகற்றிட பொதுமக்கள் கோரிக்கை
X

கிருஷ்ணகிரி அணையில் படர்ந்துள்ள ஆகாய தாமரை

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலையில் கிருஷ்ணகிரி அணை உள்ளது. இந்த அணையின் மூலம் பெரியமுத்தூர், திம்மாபுரம் உள்ளிட்ட 12 ஊராட்சிகளை சேர்ந்த 9012 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அத்துடன் கிருஷ்ணகிரி நகருக்கும் இந்த அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திம்மாபுரம் பகுதியில் இருந்து குடிநீருக்கும் தண்ணீர் ஏற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது போதிய மழை இல்லாத காரணத்தால் அணைக்கு வரும் தண்ணீரை கொண்டு பாசனத்திற்கு பொதுப்பணித்துறையினர் தண்ணீரை திறந்துவிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றில் ஏராளமான ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இது பார்ப்பதற்கு அழகாக காணப்பட்டாலும், இந்த செடிகள் தண்ணீரில் அழுகுவதால், அதிக கொசுக்கள் உற்பத்தியாவதுடன், தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.

அத்துடன் ஆகாய தாமரை செடிகள் அதிக நீரை உறிஞ்சும் தன்மை கொண்டதால், ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த சூழ்நிலையில் மேலும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. தற்போது அணை பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் இந்த அணையின் அருகில் உள்ள ஆற்றில் பொதுமக்கள் குளித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் இந்த துர்நாற்றத்தை கண்டு குளிக்கவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் மாசை ஏற்படுத்தும் இந்த ஆகாய தாமரை செடிகளை அகற்றிட பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 1 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?