/* */

கிருஷ்ணகிரி: 3036 தபால் வாக்குகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3036 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க படிவம் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி: 3036 தபால் வாக்குகள்
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3036 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 13 ஆயிரத்து 723 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 80 வயதிற்கு மேற்பட்ட 28 ஆயிரத்து 543 வாக்காளர்கள் என 42 ஆயிரத்து 266 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்க படிவம் 12டி வழங்கும் பணிகள் நடந்தது. இதில் ஊத்தங்கரை தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 431 பேரும், மாற்றுத்திறனாளிகள் 203 பேர் என மொத்தம் 634 பேர் தபால் வாக்களிக்க படிவம் 12டி வழங்கி உள்ளனர். இதே போல் பர்கூர் தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் 233 பேரும், மாற்றுத்திறனாளிகள் 72 பேர் என மொத்தம் 305 பேருக்கும், கிருஷ்ணகிரி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் 401 பேரும், மாற்றுத்திறனாளிகள் 166 பேர் என மொத்தம் 567 பேருக்கும் 12டி படிவம் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல் வேப்பனஹள்ளி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் 274 பேரும், மாற்றுத்திறனாளிகள் 58 பேர் என மொத்தம் 332 பேருக்கும், ஓசூர் தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் 364 பேரும், மாற்றுத்திறனாளிகள் 55 பேர் என மொத்தம் 419 பேருக்கும், தளி தொகுதியில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் 629 பேரும், மாற்றுத்திறனாளிகள் 150 பேர் என மொத்தம் 779 பேருக்கும் தபால் வாக்களிக்க படிவம் 12டி வழங்கி உள்ளனர். அதன்படி, மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் 2332 பேரும், மாற்றுத்திறனாளிகள் 704 பேர் என மொத்தம் 3036 பேர் தபால் வாக்களிக்க படிவம் 12டி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 22 March 2021 3:35 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  2. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  3. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  4. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  5. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  6. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  7. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  8. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  9. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  10. தமிழ்நாடு
    கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிகல்வித்துறையுடன் இணைப்பதற்கு ஓபிஎஸ்...