/* */

திமுகவில் இணைந்த தேமுதிகவினர்

கிருஷ்ணகிரியில் செங்குட்டுவன் எம்எல்ஏ. முன்னிலையில் தேமுதிக நகர செயலாளர் தலைமையில் சுமார் 300 பேர் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

திமுகவில் இணைந்த தேமுதிகவினர்
X

கிருஷ்ணகிரியில் செங்குட்டுவன் எம்எல்ஏ முன்னிலையில் தேமுதிக நகர செயலாளர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 300க்கும் அதிகமானோர் திமுகவில் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி தமிழ்நாடு ஓட்டலில், தேமுதிக கிருஷ்ணகிரி நகர செயலாளர் பரந்தாமன் தலைமையில், சுமார் 300க்கும் அதிகமானோர் தேமுதிகவில் இருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த தேமுதிக நிர்வாகிகளை திமுக நகர செயலாளர் நவாப் வரவேற்றார். இவர்கள் அனைவரும், தேமுதிக நகர செயலாளர் பரந்தாமன் தலைமையில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான செங்குட்டுவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அப்போது அவர்கள் அனைவருக்கும் திமுக துண்டு அணிவித்து வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, அணிகளின் நிர்வாகிகள் நாராயணமூர்த்தி, அஸ்லாம், துரை(எ)துரைசாமி, ஒசாமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 24 March 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  2. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  4. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  7. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  8. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  10. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!