/* */

கிருஷ்ணகிரியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்: வனத்துறை அலட்சியத்தால் மக்கள் பீதி

கிருஷ்ணகிரியில் நடமாடும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிப்பதில் வனத்துறையினரின் அலட்சியத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் சிறுத்தைப்புலி நடமாட்டம்: வனத்துறை அலட்சியத்தால் மக்கள் பீதி
X

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் எதிரே சிறுத்தைப்புலி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம் - சிறுத்தை புலியை பிடிக்க நாய் குட்டியுடன் கூண்டு வைத்து மூடி சென்ற வனத்துறையினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு வனப்பகுதிகள். இந்த வனப்பகுதிகளில் யானைகள், கரடி, சிறுத்தை, புலிகள், மான் போன்ற விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு தேடி அருகே உள்ள கிராமங்களுக்குள் நுழைவது தொடர் சம்பவமாகவே உள்ளது. அப்படி கிராமங்களை விலங்குகளை வனத்துறையினர் விரட்டுவதும் பிடித்துச் சென்று அடர்ந்த காட்டுப்பகுதியில் விடும் பணியில் ஈடுபடுகின்றனர்.

அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேஆர்பி அணை அருகே உள்ள சிறிய மலைக் குன்றில் சிறுத்தைப்புலி ஒன்று குட்டியுடன் சுற்றிவருவதை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்துள்ளனர். தகவலின்பேரில் சிறுத்தை புலியை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த சிறுத்தை புலி தற்போது இடம்பெயர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள கூசு மலை என்னும் சிறுமலை குன்றில் இருப்பதாக கூறப்படுகிறது. இரவு நேரங்களில் வெளியே வரும் சிறுத்தைப்புலி அருகே உள்ள பாஞ்சாலி ஊர் கிராமத்தில் நுழைந்து ஆடு மற்றும் நாய்களை கடித்து இழுத்துச் செல்வதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர்.

இதனையடுத்து வனத்துறை சார்பில் சிறுத்தை புலி பதுங்கி இருப்பதாக கூறப்படும் கூசு மலைக் குன்று அருகே நேற்று கூண்டு வைத்துள்ளனர். அதில் ஒரு நாய்க்குட்டியை கட்டிவைத்து சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் இதுவரையில் சிறுத்தை புலி கூண்டில் சிக்கவில்லை.

ஆனால், இன்று காலை பார்த்தபோது கூண்டில் வைக்கப்பட்ட நாய் குட்டியும் அப்படியே உள்ளது. கூண்டுக் கதவும் மூடியே உள்ளது. சிறுத்தைபுலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்லாததால் கூண்டு திறந்து உள்ளதா மூடப்பட்டு உள்ளதா என யாருக்கும் தெரியவில்லை.

வனத்துறை அலுவலர்கள் முறையாக கண்காணிக்கவில்லை எனவும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியிலும், இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வராமலும் முடங்கி உள்ளனர்.

Updated On: 19 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...