/* */

டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம் அரசுக்கு கோரிக்கை

ஊரடங்கின்போது விவசாயிகள் டூவீலரில் தடையின்றி செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

HIGHLIGHTS

டூ வீலரில் செல்ல அனுமதி: விவசாயிகள் சங்கம்  அரசுக்கு கோரிக்கை
X

ஊரடங்கின் போது, விவசாயிகள் தங்குதடையின்றி விளை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதில், விவசாய பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை என அரசு அறிவித்துள்ளது.

வீட்டில் இருந்து விவசாய நிலத்திற்கு இரு சக்கர வாகனத்தில்தான் செல்ல வேண்டும். அங்கிருந்து மீண்டும் வீடுவரை டூவீலரில் வர வேண்டும். விளைப் பொருட்களை சந்தையில் விற்று மீண்டும் அதே வாகனத்தில் வீடு திரும்ப வேண்டும். மாங்காய், தேங்காய், காய்கறி, கீரை வகைகள் அறுவடை செய்ய கூலியாட்கள் வாகனத்தில்தான் செல்ல வேண்டும்.

இவர்கள் அனைவருக்கும் பாஸ் வழங்க முடியாது. இதனால் போலீசாருக்கு அறிவுரை வழங்கி, விவசாயி என்று தெரிந்தால் அவரை அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளது.

Updated On: 10 May 2021 12:58 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்