/* */

ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த அறம் சிகரம் அமைப்பினர்

கிருஷ்ணகிரியில், ஆதரவற்ற சடலத்தை உரிய சடங்குகள் செய்து, அறம் சிகரம் தொண்டு அமைப்பினர், நல்லடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

ஆதரவற்ற சடலத்தை நல்லடக்கம் செய்த அறம் சிகரம் அமைப்பினர்
X

கிருஷ்ணகிரி, சேலம் மேம்பாலம் அருகே அறம் சிகரம் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்ககின் போது, இந்த அமைப்பினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உண்ண உணவு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கோவிட் இரண்டாம் அலையிலும், அறம் சிகரம் தொண்டு அமைப்பு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் இரண்டு நாட்களாக ஆதரவற்றா நிலையில் இருந்து வந்த நிலையில், காவல்துறையினர் இன்று அறம் சிகரம் தொண்டு நிறுவன நிறுவனர் டாக்டர் கோபிநாத்திடம், உடலை ஒப்படைத்தனர்.
இதனை அடுத்து. கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மேம்பாலம் அருகே உள்ள நகராட்சி மயானத்தில் உரிய சடங்குகளுடன் பூ, மாலை வைத்து உடலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

Updated On: 12 May 2021 2:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’