/* */

பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

வன விலங்குகளால் ஏற்பட கூடிய பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

பயிர் சேதங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
X

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சரயு தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, இணை இயக்குனர்கள் தோட்டக்கலைத்துறை பூபதி, வேளாண்மைத்துறை கிருஷ்ணன் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் கூறுகையில், கதிர் அடிக்கும் இயந்திரத்தை மானிய விலையில் வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்று உபரிநீரை, மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும். தற்போது ஏரிகளின் நீரின்றி வறண்டும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

செண்டுமல்லி பூக்கள் தற்போது கடும் விலை சரிவு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் சாமிக்கு பயன்படுத்தும் மலர்கள் அனைத்தும், ஊதுப்பத்தி தயாரிக்க அனுப்பி வைக்கப்படுகிறது. இதே போல், அரசு சார்பில் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் தொடங்க வேண்டும். பூக்கள் விலை சரிவின் போது, ஊதுபத்தி தயாரிக்க பயன்படுத்தினால், அரசுக்கும், விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும்.

கிருஷ்ணகிரி அணைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு சின்னகுட்டபை என்னுமிடத்தில் விவசாயம் செய்ய 500 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகள் ராகி, சோளம், கம்பு உள்ளிட்டவை சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு மின்சாரம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மான், மயில், குரங்கு உள்ளிட்ட வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். இந்த ஆண்டில் யானைகள் தாக்கி இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். யானைகள் வருவதை தடுக்க அமைக்கப்பட்ட சோலார் தடுப்பு வேலிகள் போதிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக யானை விளைநிலத்திற்குள் . சோலார் தடுப்பு வேலியை பராமரிக்க போதிய நிதி ஆதாரத்தை மாவட்ட நிர்வாகம், வனத்துறையினருக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த ஆட்சியர் சரயு கூறுகையில், தென்பெண்ணை ஆற்று உபரிநீர், எண்ணேகொல்புதூர், ஆழியாளம், பாரூர் உள்ளிட்ட நீர்நிலை விடும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. நீரின்றி காணப்படும் ஏரிகளின் விவரங்கள் அளித்தால் தேவையான நடவடிக்கை வேண்டும்.

ஊதுபத்தி தொழிற்சாலை தொடங்குவது குறித்த சாத்தியகூறுகள் மற்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும். சின்னகுட்டபையில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மூலம் மனு அளித்தால், தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். சேலார் தடுப்பு வேலிகள், 100 நாட்கள் வேலையாட்கள் மூலம் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் கோரிக்கைகளை அனைத்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Updated On: 22 Oct 2023 4:35 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  2. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  3. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  4. மயிலாடுதுறை
    மயிலாடுதுறையில் பள்ளி வாகனங்கள் ஆய்வு..!
  5. வானிலை
    தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம்
  6. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  8. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  9. வீடியோ
    சபையில் வைத்து கிழிக்கப்பட்ட ஐ.நா தீர்மானம் | இது தான் காரணமா ?...
  10. ஈரோடு
    கோபியில் கல்லூரிக் கனவு வழிகாட்டல் நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர்...