/* */

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்: பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி கரூரில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி, அன்னதானம், ரத்ததானம் வழங்கினர்

HIGHLIGHTS

வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள்: பல்வேறு   அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை
X

வ.உ.சி. பிறந்தநாளையொட்டி கரூரில் அவரது சிலைக்கு மரியாதை செலுத்திய பல்வேறு அமைப்பினர்

கரூரில் வ.உ சிதம்பரனார் 150 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தாந்தோண்றிமலையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார் 150 -ஆவது பிறந்த நாள்விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, கரூரில் உள்ள வ.உ.சி சிலைக்கு, வ.உ.சி பேரவை, பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வ.உ.சி. சுதந்திர போராட்டத்துக்கு அளித்த அளப்பரிய பங்கு குறித்து நினைவு கூரப்பட்டது. வ. உ. சிதம்பரனார் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படும், கப்பல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது என பல்வேறு அறிவிப்புகளை சட்டமன்ற கூட்டத் தொடரில் வெளியிட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கரூர் மாவட்டத்தில் வ.உ.சிதம்பரனாருக்கு உருவச்சிலை வைக்கப்படும் என உறுதியளித்த, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் பல்வேறு அமைப்பினர் நன்றி தெரிவித்தனர்.

Updated On: 6 Sep 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...