/* */

பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்றகோரி மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கரூரில் 17 வயது சிறுமி பாலியல் சீண்டலால் உயிரிழப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பாலியல் குற்றங்களுக்கு தனிச்சட்டம் இயற்றகோரி  மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆடசியர் அலுவகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்கத்தினர்.

கரூரில் கடந்த 19 ஆம் தேதி தனியார் பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதாக கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை பல்வேறு சமூக அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் கண்டித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சைபர் கிரைம் ஏடிஎஸ்பி கீதாஞ்சலி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன் தலைமையில் மாணவ- மாணவியர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தையும், அங்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்படுவதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Updated On: 22 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!