/* */

சட்டம் பெண்களுக்கு 100 சதவீதம் பாதுகாப்பை உறுதி செய்கிறது: ஆட்சியர்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு விலக்கு தீர்வு சட்டம் 2013 குறித்த நிகழ்வு நடைபெற்றது

HIGHLIGHTS

சட்டம் பெண்களுக்கு 100 சதவீதம்  பாதுகாப்பை உறுதி செய்கிறது: ஆட்சியர்
X

நிகழ்வில்,  பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு  பதாகைகளுடன் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல், தடுப்பு விலக்கு தீர்வு சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், கரூர் சட்ட பணிகள் ஆணைக் குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான மோகன்ராம் கலந்து கொண்டு பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் குறித்து விளக்கம் அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேசுகையில், எது எல்லாம் விரும்பத்தகாத செயல்களோ, அது பாலியல் வன்கொடுமை. பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. சட்டம் பெண்களுக்கான 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்கிறது. அரசு மற்றும் தனியார் இடங்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.

10 பெண்களுக்கு மேல் பணிபுரியும் இடங்களில் விசாக கமிட்டி அமைப்பது அவசியம். இச்சட்டத்தை பெண்கள் தங்களது பாதுகாப்புக்கான கேடயமாக பயன்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை வெளிக் கொண்டு வருவதில் உள்ள தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பேசினார். கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Dec 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?