/* */

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர்

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் வருகை தந்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

HIGHLIGHTS

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர்
X

கரூர் நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல், 2024ஐ முன்னிட்டு 23. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக ராகுல் அசோக் ரெக்காவர் (ஐ.ஏ.எஸ்) கரூர் மாவட்டத்திற்கு 26.03.2024-ஆம் தேதி வருகை புரிந்துள்ளார்.

23. கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க விரும்பினால் தேர்தல் பொது பார்வையாளர் அவர்களின் அலைபேசி எண்.9487118596-இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும். தேர்தல் பொது பார்வையாளர் தங்கியுள்ள புகளூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகை பிளாக் எண்.3. அறை எண். 11-ல் தினமும் மாலை 04.00 மணி முதல் 05.00 மணி வரை நேரில் சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் தங்கவேல், தெரிவித்தார்.

இன்று (26.03.2024) புகளுர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவன விருந்தினர் மாளிகையில் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ராகுல் அசோக் ரெக்காவர் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருடன் தேர்தல் தொடபான பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். கரூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. முனைவர் பிரபாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், விராலிமலை. மணப்பாறை மற்றும் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 March 2024 4:32 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்